ஒரு விரலில் 129 கிலோ எடையைத் தூக்கிய ’இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் கீலர்… கின்னஸ் சாதனையில் இடம்!

ஒரு விரலில் 129 கிலோ எடையைத் தூக்கிய ’இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் கீலர்… கின்னஸ் சாதனையில் இடம்!

இங்கிலாந்து,
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த் ஸ்டீவ் கீலர் என்பவர்தான் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் கீலர் என்பவர், ஒற்றை விரலால் அதிக எடையுடன் இறக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார். கீலர் ஒரு தற்காப்புக் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.


முதல் முறை பலர் முன்னிலையில் ஒரே நேரத்தில் ஆறு இரும்பு எடை டிஸ்க்குகளை உயர்த்தினார்.

கின்னஸ் உலக சாதனையின் படி, அந்த 6 டிஸ்குகளில் ஒன்று 10 கிலோ எடையும், ஒன்று 20 கிலோ எடையும், மூன்று 25 கிலோவுக்கு சற்று அதிகமான எடையும், மற்றொன்று 26 கிலோ எடையும் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

48 வயதான கீலர் கடந்த நான்கு ஆண்டுகளாக இதற்கானப் பயிற்சி செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: