ஓபிஎஸ் – க்கு முன்னாள் அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்!!
அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் எனவும், எடப்பாடி கே.பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது எனவும் ஓபிஸ் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் இன்று தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், இத்தீர்ப்பை கொண்டாடும் வகையில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தின் முன்பு அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், முன்னாள் அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி, ஓபிஎஸ்-க்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.