“மட்டரக” அரசியல் செய்யும் அண்ணாமலை – தமிழக அமைச்சர் கடும் தாக்கு..!!

“மட்டரக” அரசியல் செய்யும் அண்ணாமலை – தமிழக அமைச்சர் கடும் தாக்கு..!!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ 38 கோடி மதிப்பீட்டில், விளாங்குறிச்சி, பெரியதடாகம், டவுன்ஹால், உக்கடம், நஞ்சுண்டாபுரம், போத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு பண்டக சாலை திறந்து வைத்தும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டவும், சாலை பணிகளை துவக்கி வைத்தும் பூமி பூஜைகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பின்புறம் 19.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்கும் பணியை துவக்கி வைத்த மின்துறை

அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது;-

இந்த ஓராண்டில் மட்டும் 198 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் கோவை மாநகராட்சியில் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரத்தில் 113 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க பணிகள் துவக்கி வைக்கப்பட்டள்ளன, இன்று 38 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சியில் விடுபட்ட சாலைகளுக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கருத்துரு அனுப்பப்பட்டு, கூடுதல் நிதிகளை பெற்று கோவை மாநகராட்சியை பொருத்தவரை அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்ட சீரமைக்கப்பட்ட சாலைகளாக தமிழக முதல்வரின் ஆட்சியில் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.

அரசு மாறும்போது முதல் நாள்… முதல் கையெழுத்து… செந்தில்பாலாஜி என அண்ணாமலை கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி…

சில பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர், எனக்கு நிறைய வேலை இருக்கிறது.
வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியமில்லை, கறந்த பால் மடி புகாது, அண்ணாமலையின் கனவு ஒருநாளும் பலிக்காது, இவ்வளவு பேசுபவர் ஏன் அரவகுறிச்சியில் மண்ணை கவ்வினார், ஏன் மக்கள் விரட்டியடித்தார்கள் என கேள்வி கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி.

நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் இப்போது கூட எடுக்கலாமே? நாங்கள் வேண்டாம் என்றா கூறுகிறோம் எனக்கேட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, அரவகுறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தாறே எங்கிருந்து வந்தது? காவல்துறையில் சம்பளம் வாங்கி சம்பளத்தை சேர்த்து வைத்தா? அல்லது ஆடு மாடு மேய்த்து சேர்த்து வைத்தா, வாக்களார்களுக்கு பணம் கொடுத்தார் என கேள்வி எழுப்பினார்.

எந்த காலத்திலும் அவர்கள் நினைப்பது நடக்காது, நடவடிக்கை எடுக்கலாம் என்றால் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் எனத் தெரிவித்தார். மேலும் 143 கோடி டாலருக்கு நிலக்கிரி குறைவான விலையில் நாங்கள் வாங்கியிருக்கிறோம்.

பாஜக ஆளும் மாநிலங்களில் எவ்வளவு கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது எனகேட்ட அமைச்சர், நிலக்கரி குறைவான அளவு இறக்குமதி செய்யும்போது கூட தமிழகத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும், குஜராத்தில் ஏன் தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டு அறிவித்துள்ளார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் முதல்வர் அறிவிக்கும் 39 வேட்பாளர்களும் மகத்தான வெற்றியை பெறுவார்கள் எனவும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக தமிழக முதல்வர் இருப்பார் எனவும் தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை நீதிமன்றத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண், அணிலால் உயிரிழந்தாக கூறப்பட்டுள்ளதை சுட்டிகாட்டிய செந்தில்பாலாஜி, இதுபோன்று வன உயிரினங்களால் மின்வெட்டு ஏற்படுமா ஏற்படாதா என அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பினார்.

விளம்பரத்திற்கும் வேலைக்கும் வித்தியாசம் உள்ளது எனவும் நாங்கள் மக்களுக்கு வேலை செய்கிறோம் எனவும், அண்ணாமலை வெட்டி விளம்பரத்தில் இருக்கிறார் எனவும், மட்டரகமான அரசியல்வாதிக்கு, தரம் தாழ்ந்து பேசக்கூடிய அரசியல்வாதிக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும், ஒன்னாம் நம்பர் படிச்ச முட்டாள் என கடுமையாக விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: