“மதக் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை” – சர்ச்சை போஸ்டரால் கோவையில் பரபரப்பு…

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் காடுவெட்டிபாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் ”எச்சரிக்கை! இங்கு இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி. இங்கு மத பிரச்சாரம் செய்யவும், மதக் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேனர் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத ரீதியாக வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் குறித்து அப்பகுதி அதிகாரிகள் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தேவையற்ற காழ்புணர்ச்சிகளை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply