சிறுவர்கள் முதல் பரியவர்கள் வரை விரும்பும் “வாழைப்பழ அப்பம்”

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்

வெல்லம் – 1/2 கப்

அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

 கனிந்த வாழைப்பழம் – 2

ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை

சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்

உப்பு – 1 சிட்டிகை

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை :

வெல்லத்தை பொடித்து கொள்ளவும். வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லப் பாகு தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மசித்த வாழைப்பழத்தை சேர்த்து, அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு, உப்பு, சமையல் சோடா, ஏலக்காய் பொடி, சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக கலந்து 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், வாழைப்பழ அப்பம் ரெடி!..

Leave a Reply