“ஸ்மார்ட் சிட்டி ஊழல்” முதல்வரிடம் அறிக்கை சமர்பித்த ஒருநபர் ஆணையம்..!!

கடந்த 2015ஆம் ஆண்டு, குறிப்பிட்ட நகரங்களை தேர்வு செய்து அந்த நகரத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கி, அதற்கான பணிகளை ஆரம்பிக்க கோரி மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

அதன் படி தமிழகத்திலும் முக்கிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டன. ஆனால் அதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றசாட்டு எழுந்தது.

அதன் படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் டி.நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரில் சென்னை முக்கிய நகரான டி.நகர் ஒன்று. ஆனால் கடந்த முறை மழை பெய்து, மழைநீர் அப்பகுதியில் அநேக இடங்களில் ஓடியது.

இதனால் முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவிதாஸ் அடங்கிய ஒருநபர் ஆணையர் குழுவிடம் கடந்த மே மாதம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

அதன்படி, தேவிதாஸ் அடங்கிய ஒருநபர் ஆணையம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம்  அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Leave a Reply