அதிமுக தொண்டர்களின் விருப்பம் எது தெரியுமா ?…மனம் திறந்த ஒபிஸ் மகன்…
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், சாமானியரும் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் அதிமுக என்றும், தொண்டர்களை உயர்ந்தவர்களாக நினைத்தவர் எம்.ஜி.ஆர் என்றும் கூறினார்.
தலைமைக்கு உண்மையாக செயல்பட்டதால் பல்வேறு பதவிகளை வழங்கியவர் ஜெயலலிதா என்று கூறிய அவர், நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என்றார். கட்சிக்குள் பிளவு இருந்தால் தொண்டர்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்றும், எதையும் எதிர்பார்க்காமல் கட்சியில் பணியாற்றி வருகிறேன் என்றும் கூறினார்.
அனைவரும் ஒரே குடும்பம்; ஒன்றாக இணைந்தால் வெற்றிபெற முடியும் எனவும், அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் என்பதே அடிப்படை தொண்டர்களின் ஒருமித்த உணர்வு என்று குறிப்பிட்டார்.
மேலும் கடந்த 2 மாதங்களில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பல்வேறு அவமானங்களை சந்தித்துள்ளார் என்ற ரவீந்திரநாத், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓபிஎஸ் தனது ஆவலை வெளிப்படுத்தி வருவதாகக் கூறினார். . எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சிக்கு அவரது உழைப்பே காரணம் எனவும், அதை நான் வரவேற்கிறேன் என்றும் தெரிவித்தார்.
அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பது தான் ஓபிஎஸ்-ன் நோக்கம் எனவும், ஈபிஎஸ் பதவிக்காக தொண்டர்களை குழப்பி வருவதாகவும் கூறினார்..