ஆம் , தற்போது காங்கிரஸின் நிலை மோசம் தான்…உண்மையை ஒப்பு கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர்….
மயிலாடுதுறை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர் மயிலாடுதுறையில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்தியாவில் மாற்று ஆட்சியை காங்கிரசால் மட்டுமே தர முடியும். காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது உண்மைதான். அதை வலுப்படுத்துவதற்காக ராகுல் காந்தி தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு பாடுபட்டு நாட்டை ஒருங்கிணைத்தவர் ஜவஹர்லால் நேரு அதையெல்லாம் மறைத்து மோடி நாடகமாடுகிறார்” என்றார்.
காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து தலைவர்கள் வெளியேறி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் வெளியேறுவதைப் பற்றி பயப்படத் தேவையில்லை. என்னைப் போன்ற பெரிய தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர். 5ஜி அலைக்கற்றை ஊழலில் சென்று கொண்டிருக்கிறது, ஊழல் இதுவரை வெளிவரவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.
காங்கிரஸ் கூட்டணி பிளவு பட்டுள்ளதால் 35 சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ள மத்திய அரசு இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அப்போது முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.