சுயமாக சிந்திக்க தெரியாத சுயநலக்காரர் தான் ஒபிஸ் ….அதிமுக எம்எல் ஏ ஆவேசம் …

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அவரை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம். எனவும் எடப்பாடி பழனிசாமியில் ஆதரவாளரான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர். அவர், ஜெயலலிதா மறைவிற்கு பின், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை எந்தவித சூழ்நிலையிலும் இந்த கட்சியில் சேர்த்துவிட கூடாது. நான் உயிருள்ள வரை அவர்களை சேர்க்க விடமாட்டேன்.

இதே போல் டி.டி.வி..தினகரன் ஒரு மாயமான், அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்று கூறிய அவர் பல்வேறு காலக் கட்டங்களில் தன்நிலையை மாற்றி பேசி சுயநலவாதியாகவும், சந்தர்ப்பவாதியாகவும் இருந்துள்ளார்..தொடர்ந்து பேசிய அவர், ஓ. பன்னீர்செல்வம் ஒரு இயக்கத்தில் கடுமையாக போராடி, பல சோதனைகளை சந்தித்து, பல அவமானங்களை சந்தித்து,அவற்றை வென்றெடுத்து இந்த நிலைக்கு வந்திருந்தால் அவர் தெளிவான முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

அவர் ஒருவர் பின்னாலே இருந்து வந்தவர். அவர் சொல்வதை கேட்டு கேட்டு செயல்பட்டவர். சுய சிந்தனை இல்லாதவர். அந்த சுய சிந்தனை இல்லாதவர் இப்படி தான் பேசுவார். அவருக்கு சுயமாக சிந்திக்க தெரிகிறதோ இல்லையோ, சுய நலக்காரராக இருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சுய நலத்திற்காக கட்சியையும், கட்சி தலைமையையும் பயன்படுத்தி உள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நபரை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம். இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction