போலீஸ் உயரதிகாரியிடமே ரூ.8 லட்சம் ஆட்டையை போட்ட ஆன்லைன் மோசடி கும்பல் …பரபரப்பு …

ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், நெல்லையில் போலீஸ் உயர் அதிகாரியிடமே 8 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் 12-வது பட்டாலியன் கமாண்டண்ட் ஒருவருக்கு, உயரதிகாரியிடமிருந்து அமேசான் பரிசு கூப்பன் தொடர்பான ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக மர்மநபர் ஒருவரும் கைப்பேசி வாயிலாகவும் அந்த காவலரிடம் பேசியுள்ளார்.

இதனை நம்பிய அக்காவலர், 8 லட்சம் ரூபாய் வரையிலான பரிசு கூப்பன்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தன்னுடன் பணியாற்றும் சக காவலர்களிடம் தெரிவித்தபோது, தான் ஏமாற்றப்பட்டதைக் அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அக்காவலர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது நைஜீரியா நாட்டை சோந்தவா் என தெரியவந்த நிலையில், போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply