வாகன ஓட்டி தன்னை அடித்ததால் செருப்பை கழற்றி திருப்பி அடித்த பெண் டோல்கேட் ஊழியர் …பரபரப்பு வீடியோ ..

மத்திய பிரதேசத்தில் டோல்கேட்டில் பெண் ஊழியரை, நபர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.

அந்த வீடியோவில் டோல்கேட் பெண் ஊழியரிடம் வேகமாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபடும் திடீரென பெண்ணை தாக்குகிறார். எதிர்பார்க்காத பெண், தானும் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அவரை திருப்பித் தாக்குகிறார்.காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி தன்னை அடித்த நபரை தாக்குகிறார்.

சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. பலரும் பெண்ணை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இன்னும் சிலர், அங்கு நடந்த சம்பவத்தை முறையாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

டோல்கேட் பெண் ஊழியரை ஆண் ஒருவர் தாக்கும் இந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. 

Leave a Reply