ருத்ராட்ச வளையல் அணிவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!!

ருத்ராட்ச வளையல் அணிவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!!

இந்து மதத்தில் உள்ள அனைத்து தெய்வங்களிலும் சிவபெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று நம்பப்படுகிறது.

சிவபெருமானை நீங்கள் தொடர்ந்து வேண்டி வந்தால் தினமும் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் பிரச்சினைகளும் தீரும். கடினமான சவால்களை நீங்கள் சமாளிக்க முடியும். சிவபெருமானுடன் தொடர்புடையது ருத்ராட்சம். ருத்ராட்சம் என்பது சிவபெருமானின் கண்ணீரில் இருந்து நேரடியாக வந்த ஒரு புனித மரம்.

உலகில் உள்ள பல்வேறு ரத்தினங்கள் மற்றும் கற்களை காட்டிலும் இது மிகவும் சக்திவாய்ந்த பொருள். வாழ்க்கையை மாற்றி நல்லறிவு மற்றும் தூய்மையான வாழ்க்கையை நோக்கித் திரும்ப விரும்பும் ஒருவருக்கு ருத்ராட்சம் முக்கியமானது. ருத்ராக்ஷத்தை பல்வேறு வடிவங்களில் அணியலாம்.

அதில் ருத்ராட்ச வளையல் என்பது அனைவரும் பொதுவாக அணியலாம். ஆனால் ருத்ராட்ச வளையல் அணிவதற்கு முன் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான வழிமுறைகள் உள்ளன.

இந்த வழிமுறைகள் ருத்ராட்சம் மற்றும் சிவபெருமான் கொடுக்கக்கூடிய பலன்களையும் ஆசீர்வாதங்களையும் எளிதில் உங்களுக்கு கிடைக்க உதவும். ருத்ராட்ச வளையல் அணிவதற்கு முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

உங்கள் ருத்ராட்சத்தை அணிவதற்கு முன்னர் மிகவும் தூய்மையுடன் இருக்க வேண்டும். நீங்கள் ருத்ராட்சத்தை அணிந்து ஜபிக்க விரும்பினால் அதற்கு நீங்கள் முற்றிலும் தயாராக உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ருத்ராட்சம் அணிவதற்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தூய்மை அவசியம். எனவே ஆற்றல் மிக்க ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள சிவன் கோவிலுக்குச் செல்வதற்கு முன் முறையாக குளித்து உங்கள் உடலை சுத்தம் செய்யுங்கள்.

மேலும் அசைவ உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும். மனத் தூய்மைக்காக தியானப் பயிற்சியில் ஈடுபடவும். புனித நூல்களைப் படிக்கவும். கோவிலுக்கு சென்று வாருங்கள். இது உங்கள் உள்மனதை தூய்மையாக்க தொடங்கும். ருத்ராட்சம் அணிந்து அமைதியான வாழ்க்கைக்கு உங்களை தயார்படுத்தவும் உதவும்.

ருத்ராட்சத்தை சரியான இடத்திலிருந்து வாங்குவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். போலி ருத்ராட்சம் நல்ல பலனைத் தராது.

எனவே ருத்ராட்சத்தை வாங்கும் போது கவனமாக இருங்கள். உங்கள் ருத்ராட்ச வளையலை நம்பிக்கையான நபரிடமிருந்து வாங்குவது அல்லது சிவன் கோவிலில் உள்ள பூசாரிகளிடம் அதற்கான சரியான இடத்தைக் கேட்பது சிறந்த வழி.
ருத்ராட்சம் வாங்கும் பொழுது பேரம் பேசியோ கடனாகவோ வாங்க கூடாது.

ருத்ராக்ஷம் என்பது ஏராளமான ஆசீர்வாதங்களையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் மிகவும் மங்களகரமான மணி. நல்ல அதிர்ஷ்டத்தை ஒருவரிடமிருந்து கடன் வாங்க முடியாது.

உங்களுக்கான ருத்ராட்சத்தை வாங்க நீங்கள் கடன் வாங்க கூடாது. அதுபோல ருத்ராட்சம் வாங்கும் பொழுது பேரம் பேசாதீர்கள்.

கடவுளை வணங்கும் பொழுது எப்படி பயபக்தியோடு இருக்கிறீர்களோ அதுபோல ருத்ராட்ச வளையல் அணியும் பொழுது பயபக்தியோடு அதை செய்யுங்கள். அழுக்கு கைகளால் ருத்ராட்ச மணிகளைத் தொடாதீர்கள்.

தகனம் செய்யும் பொழுது அவற்றை அணிவதைத் தவிர்க்கவும். உங்களுடைய அல்லது வேறொருவரின் ருத்ராட்ச வளையலை ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்ட கூடாது.

உங்களிடம் இருக்கும் ஆற்றல்மிக்க ருத்ராட்ச வளையல் உங்களுக்காகவே தயாரிக்கப்பட்டது. நீங்கள் அதை பிறருக்கு கொடுத்தால் அது சிவபெருமானுடன் நீண்டகாலமாக உங்களுடன் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படும்.

ருத்ராட்ச வளையல் என்பது வழக்கமான அணிகலன் அல்ல. சிவபெருமானிடமிருந்து நேரடியாக வந்த ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட வளையல். எனவே அதை அணிவதற்கு முன்னும் பின்னும் எல்லா முக்கியமான வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

ருத்ராட்சக் காப்பு அணிந்து வழிபடுவது உங்களுக்கு செழிப்பு, செல்வம், அமைதி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை கொடுக்கிறது.

ஆனால் ருத்ராட்சத்தை அப்படியே போட கூடாது. ருத்ராட்ச வளையல் அணிவதற்கு முன் அதற்கான முறையான சடங்கு பின்பற்றப்பட வேண்டும். பூசாரிகளால் செய்யப்படும் முறையான மந்திரங்கள் ருத்ராட்ச மணிகளின் புனிதமான செயல்பாட்டை அதிகப்படுத்தும்.

சடங்குகளைச் செய்வதற்கும் ருத்ராட்ச வளையல் அணிவதற்கும் சிறந்த மிகவும் மங்களகரமான நாள் சுக்ல பக்ஷ திங்கட்கிழமை. சிவபெருமான் மற்றும் ருத்ராட்சத்தின் நேரடி ஆசீர்வாதத்தை நீங்கள் அடையக்கூடிய இந்த நாள் சிவ பெருமானின் நாளாக கருதப்படுகிறது.

மேலும் ருத்ராட்சத்தை அணிந்த பிறகு முறையான வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: