செவ்வாய் முருகனுக்கு உகந்த நாளாகும்…..
இந்த நாளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்!!

செவ்வாய் என்பது சிவந்த வாய் என்பதின் சுருக்கம். இந்த கிரகத்தின் நிறம் சிவப்பு அதனால் அந்த காலத்தில் ரிஷிகள் இந்த யெரை வைத்தார்கள்.

வட இந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்பார்கள். இந்த நாளில் பூமி சம்பந்தப்பட்ட காரியங்கள் செய்யலாம். விவசாய வேலைகள் செய்யலாம். மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது.

செவ்வாய் முருகனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளம் பெறும். மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியக் கிழமை வெள்ளிக்கிழமை. இந்த கிழமையில் அம்மனுக்கு விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவி மந்திரத்தை கற்ற சுக்கிராச்சாரியார் அம்சம் பெற்றது இந்த கிழமை. சுப காரியங்கள், திருமண காரியங்கள், தெய்வ காரியங்கள் இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறப்பாகும். இதனால்தான் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

Leave a Reply