எங்களை சி.பி.ஐ. நெருக்க காரணம் என்ன தெரியுமா ? டெல்லி முதல்வர் கூறிய உண்மை …

குஜராத்தில் இந்த ஆ்ண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்துக்கு அடிக்கடி பயணம் செய்து தீவிரமாக ஆம் ஆத்மிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அந்த வகையில் கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக குஜராத் மேற்கொண்டார். குஜராத் பயணத்தின் கடைசி நாளான நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் பாவ்நகரில் இளைஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: டெல்லியில் 2 லட்சம் அரசு மற்றும் 10 லட்சம் தனியார் வேலைகள் வழங்கப்பட்டுள்ளது.

 நாடு முழுவதும் மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் இந்த உற்சாகம்தான் சி.பி.ஐ. என் மீதான கயிற்றை இறுக்க வைக்கிறது. நான் நேர்மையான நபர், சி.பி.ஐ.க்கு நான் பயப்படவில்லை. அடுத்த 10 நாட்களுக்குள் மணிஷ் சிசோடியாவை கைது செய்வார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால், அடுத்த 2 முதல் 3 நாட்களில் அவரை கைது செய்வார்கள் என்று இப்போது உணர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction