காசு கொடுத்து வாங்கு ..இல்ல ஏமாத்தி ஓட்டு வாங்கு …இந்த முட்டாள்களோட ஓட்டை வாங்கறது ரொம்ப முக்கியம்…. உளறிகொட்டிய கி. வீரமணி ….
சென்னை:
திமுக மற்றும் திக இடையேயான வேறுபாடு என்ன? என்பது பற்றிய கேள்விக்கு விளக்கமளித்த கி வீரமணி,‛‛நாளை நாமே அரசியலுக்கு வந்தால் முட்டாள்களின் ஓட்டை வாங்குவது தான் மிக முக்கியம்” என பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், மேடையில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி இருக்கிறார். அப்போது ‛‛திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் இதில் முன்னேற்ற கழகத்தில் ‛ர்’ இல்லை. இதற்கு என்ன வித்தியாசம்?” என கேள்வி கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு கி வீரமணி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அவங்க அரசியலுக்கு போறவங்க அதாவது என்ன வித்தியாசம் என்றால் பெயர் தான் வித்தியாசம். அவங்களை பொறுத்தமட்டில் அரசியல். அவர்கள் அரசியலுக்கு போறவர்கள். ‛ஒன்றே குலம் ஒருவனை தெய்வம்’ என கூறுவார்கள். அரசியலுக்கு போய்விட்டால் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு ராகம் வாசிக்கணும். ஒரே ராகம் வாசிக்க வேண்டும் என்றால் திராவிடர் கழகம் தான். இதுதான் ரொம்ப மிக முக்கியம். நாம் மாற வேண்டிய அவசியம் இல்லை. ஓட்டுக்காக ‛நாமம்’ போட்டவர் கேட்டால் வைஷ்ணவ பெருமையை அரசியல்வாதி பேசுவான். விபூதி போட்டவரிடம் சைவ பெருமை பேசுவான். நம்ம ஆள் வந்தால் பகுத்தறிவுவாதி என்பான். நாமே நாளைக்கு அரசியல்வாதி ஆனாலோ, அரசியல் கட்சியானால் நம்ம கதி அப்படித்தான் ஆகும். ஏனென்றால் முட்டாள்கள் ஓட்டு வாங்கணும் என்பது தான் மிக முக்கியம். ஒன்று காசு கொடுத்து வாங்கு, இல்லாவிட்டால் ஏமாற்றி வாங்கு. யார் அதிகம் ஏமாற்றுகிறார்கள் என்பது தான் போட்டி. வேறு ஒன்றுமே இல்லையே” என்றார். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.