இந்திய டெஸ்ட் அணியுடன் பயிற்சியாளர் ”ராகுல் டிராவிட்” ஆலோசனை!!

இந்திய டெஸ்ட் அணியுடன் பயிற்சியாளர் ”ராகுல் டிராவிட்” ஆலோசனை!!

இந்திய அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிரா ஆனது.

2-வது மற்றும் 4-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றியை பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது. கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த டெஸ்டில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த 16- ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்தபிறகு ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்று லீசெஸ்டர் சென்றடைந்தனர்.

இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணியுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆலோசனை நடத்தி வருகிறார். அணியுடன் பயிற்சியாளர் டிராவிட் ஆலோசனை நடத்தும் புகைப்பட காட்சிகளை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: