சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க கூட்டமைப்பிற்கு புதிய தலைவராக ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் வீராங்கனை லிசா ஸ்தலேகர் நியமனம்!!

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க கூட்டமைப்பிற்கு புதிய தலைவராக ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் வீராங்கனை லிசா ஸ்தலேகர் நியமனம்!!

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க கூட்டமைப்பின் (FICA) புதிய தலைவராக ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் வீராங்கனை லிசா ஸ்தலேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார். இவர் ஆஸ்திரேலியாவுக்காக 187 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் விக்ரம் சோலங்கிக்கு அடுத்தப்படியாக பதவியேற்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் நியோனில் நடைபெற்ற எப்ஐசிஎ செயற்குழு கூட்டத்தில் 42 வயதான அவர் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் குறித்து அவர் கூறியதாவது:- பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் தான் கௌரவமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்.

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க கூட்டமைப்பின் புதிய தலைவராக இருப்பதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். கிரிக்கெட் நிச்சயமாக உலகளாவிய விளையாட்டாக மாறி வருகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் பல நாடுகள் விளையாடுகின்றன. எங்கள் வீரர்களின் சார்பாக பணியாற்ற நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

குறிப்பாக ஐசிசியுடன் இணைந்து அனைத்து வீரர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவும், எங்கள் விளையாட்டை இன்னும் சிறப்பாகச் செய்ய நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: