அதிர்ச்சி …கோவை கலெக்டர் பெயரில் போலி WHATSAPP கணக்கு…போலீஸ் தீவிர விசாரணை

அதிர்ச்சி …கோவை கலெக்டர்  பெயரில் போலி WHATSAPP கணக்கு…போலீஸ் தீவிர விசாரணை

தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களின் பெயரில் போலி WhatsApp கணக்குகள் தொடங்கி நூதன முறையில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலிஸார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரின் பெயரில் மர்ம நபர்கள் போலியான WhatsApp கணக்குகளைத் தொடங்கி பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சமீரன். இவரின் பெயரில் போலியான வாட்ஸ் ஆப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. போலிக் கணக்கைத் தொடங்கிய மர்ம நபர்கள், அவரது நண்பர்ளுக்கு அமேசான் கிஃப்ட் pay coupon மூலம் பணம் அனுப்ப குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளனர்

தனது பெயரில் போலி WhatsApp கணக்கு இருந்தை அறிந்த மாவட்ட ஆட்சியர் சமீரன் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். மேலும், போலி WhatsApp கணக்கின் முகவரியையும் screenshot எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட WhatsApp எண்ணிலிருந்து மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டா என்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். அதேபோல், உயர் அலுவலர்களின் புகைப்படங்களுடன் கூடிய எண் எனக்கூறிக்கொண்டு சில மர்ம நபர்கள்,அரசு அதிகாரிகளின் அலைபேசி எண்ணுக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற மோசடி பேர்வழிகள் மீது போலிஸார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி கணக்கு தொடங்கி அவர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: