வேலை இல்லாமல் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தவருக்கு 26 ஆண்டுகள் கழித்து கிடைத்த அரசு பணி…..

வேலை இல்லாமல் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தவருக்கு  26 ஆண்டுகள் கழித்து கிடைத்த அரசு பணி…..

ஆந்திரா மாநிலம் பாத்தப்பட்டனம் அருகே உள்ள பெத்தசேதி கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான கேதாஸ்வர ராவ். சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர், உடன்பிறந்தவர்களால் வெறுக்கப்பட்டு வேலையின்றி யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார் .

இதற்கிடையே, 1994 ல்  ஆசிரியர் அரசுப்பணிக்கு தேர்வெழுதி தேர்ச்சிபெறாத கேதாஸ்வர ராவ், 1996,1998 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுப் பதிவு செய்தபோதும் பணி கிடைக்காமல் போனது.

அதன் பின்னர், உணவு,உடையின்றி ஒருவேளை உணவிற்காக ஏங்கி வந்த இவருக்கு 26 ஆண்டுகள் கழித்து தற்போது பணி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 

ஓய்வுபெறும் வயதில் பணி ஆணை வந்திருக்கும் செய்தியைக் கிராம இளைஞர்கள் வாயிலாக தெரிந்துகொண்ட கேதாஸ்வர ராவ், சான்றிதழ்கள் வைத்திருப்பதால் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆர்வமுடன் இருப்பதாக இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 பிச்சைக்காரராக இருந்து அரசு ஊழியராக உள்ளவரை கிராம இளைஞர்கள் குளிக்க வைத்து முடிதிருத்தம் செய்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: