அழிவுப்பாதைக்கு தான் செல்லும் …. சதிகாரர்கள் நடத்தும் பொதுக்குழு செல்லாது.. வைத்திலிங்கம் ஆவேசம் !

அழிவுப்பாதைக்கு  தான் செல்லும் …. சதிகாரர்கள் நடத்தும் பொதுக்குழு செல்லாது.. வைத்திலிங்கம் ஆவேசம் !

சென்னை :

புதிய பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது என்றும் ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டால் தான் புதிய பொதுக்குழுவுக்கான தேதி செல்லும் என்றும் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்தில் இன்று காலை பரபரப்பாக தொடங்கியது.

பல்வேறு கூச்சல் குழப்பங்களுக்கு இடையே தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கலைந்தது. ஒற்றைத் தலைமை குறித்து எடப்பாடி ஆதரவாளர்களின் அமளியால் பொதுக்குழு பாதியில் கலைந்தது.

பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு வந்தன. மேடையில் நடந்த சம்பவங்களும் ஓ.பி.எஸ்ஸை அச்சுறுத்தும் வகையில் இருந்தன.

ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டவுடன், பொதுக்குழு மேடையில் இருந்து ஓபிஎஸ் எழுந்தார். அப்போது, அவருடன் எழுந்து மைக்கில் பேசிய வைத்தியலிங்கம், ‘சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் இந்த கூட்டத்தை நிராகரிக்கிறோம்’ எனத் தெரிவித்தார். இதையடுத்து ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர்.

அதனைத் தொடர்ந்து வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம், சட்டத்துக்குப் புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. புதிய பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டால் தான் புதிய பொதுக்குழுவுக்கான தேதி செல்லும். அதிமுக-வை அழிவுப்பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: