பஞ்சராக்கபட்ட வாகனம் ..தண்ணீர் பாட்டில் வீச்சு ..பொதுக்குழுவில் ஒபீசுக்கு உச்ச கட்ட அவமானம்

சென்னை:
அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு வந்த ஓ பன்னீர் செல்வத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுக் குழுவுக்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். அப்போது அவரது பிரச்சார வாகனத்தை நிர்வாகிகள் உள்ளே கொண்டு வர அனுமதி மறுத்தனர்.
ஓபிஎஸ்ஸை துரோகி என முழக்கமிட்டனர். மேலும் திரும்பி போ என ஓபிஎஸ் வாகன ஓட்டுநரிடம் நிர்வாகிகள் மல்லுக்கட்டினர். இதையடுத்து ஓபிஎஸ் நேராக ஒரு அறையில் அமர்ந்திருந்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி வந்த பிறகு விழா மேடைக்கு ஓபிஎஸ்ஸும் வந்திருந்தார்.
அங்கு கீழே அமர்ந்திருந்த நிர்வாகிகள் கூச்சலிட்டனர். மேலும் தீர்மானங்களை ஓபிஎஸ் முன்மொழிந்த போதும் நிர்வாகிகள் கூச்சலிட்டனர்.
பின்னர் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார். அவரிடம் ஒற்றைத் தலைமை கோரிக்கையை சிவி சண்முகம் முன் வைத்தார். இதையடுத்து மீண்டும் பொதுக் குழு வரும் ஜூலை 11 ஆம் தேதி கூடுகிறது என அறிவித்தார். இதை கண்டித்து ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்த ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இதையடுத்து அவரது பிரச்சார வாகனமும் பஞ்சர் செய்யப்பட்டு இருந்தது. இவ்வாறு தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் என்றும் பாராமல் ஓபிஎஸ்ஸை நிர்வாகிகள் அவமானப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.