“ராணி எலிசபத்” உணவருந்திய “கப்பல் உணவகம்” கடலில் மூழ்கியது..!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…

“ராணி எலிசபத்” உணவருந்திய “கப்பல் உணவகம்” கடலில் மூழ்கியது..!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…

உலக அளவில் புகழ்பெற்ற கப்பல் உணவகம் ஹாங்காங்கில் உள்ள ஜம்போ கப்பல் உணவகம். இந்த கப்பல் உணவகம் 1976ம் ஆண்டில் அதன் சேவையை தொடங்கியது. மேலும் இந்த கப்பல் உணவகத்தை பார்த்தால் அரண்மனை போல தோற்றம் உடையது.

இந்த கப்பல் உணவகத்திற்கு பல்வேறு புகழ்பெற்ற மனிதர்கள் வருகை புரிந்துள்ளனர். பிரிட்டிஷ் ராணி எலிசபத் கூட இந்த ஜம்போ கப்பல் உணவகத்திற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை புகழ்வாய்ந்த ஜம்போ கப்பல் நிறுவனம் கொரோனா காலத்தில் பெரிதும் நிதி நெருக்கடியில் பாதிக்கப்பட்டது.

பின்னர் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்ட போதும் இந்த உணவகத்திற்கு பெரிதாக ஆட்கள் வராததால் இதனை அதன் நிறுவனம் நிறுத்தி வைத்தது. அதனை தொடர்ந்து 2 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட ஜம்போ கப்பல் நிறுவனம் தற்போது கடலில் மூழ்கியுள்ளது. இந்த கப்பல் தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்று கொண்டுள்ளது.

அப்பொழுது கப்பலில் நீர் புகுந்து கடலில் மூழ்கியதாக இதன் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலை மீட்க பல்வேறு முயற்சி செய்தும் அதனை மீட்க முடிவில்லை என்றும், அதில் பயணித்தவர்களை பத்திரமாக மீட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் தற்போது கடலில் மூழ்கிய ஜம்போ கப்பல் உணவகம் காரணமாக பலரும் சோகத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: