முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் பற்றி அவதூறு பேச்சு .. எடப்பாடி மீது போலீசில் புகார் …

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் பற்றி அவதூறு பேச்சு ..  எடப்பாடி மீது போலீசில் புகார் …

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்   மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை அவதூறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி புகார் மனு அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் குடும்ப ஆதிக்கம் அதிகம் உள்ளது என கூறலாம். அதற்கு மாறாக, தமிழகத்தில் ஒரு முதல்வர் மட்டுமில்லை, நான்கு முதலமைச்சர்கள் ஆட்சி செய்து வருகின்றனர் என்று பேசியுள்ளார்.

அதிலும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலின், சபரீசன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகிய 4 பேருமே தமிழக முதலமைச்சர்களாக ஆட்சி செய்து வருகின்றனர் என சேலம் நிலவாரப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

இவ்வாறு பேசுவது ஜனநாயக படுகொலை. கடந்த 4 ஆண்டு காலம், தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தை பற்றி, எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் எப்போதும் விமர்சனம் செய்ததில்லை.

ஆனால் தற்போது கீழ்த்தரமாக ஸ்டாலின் குடும்பத்தைப் பற்றி எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். இவ்வாறு பேசியும், தமிழகத்தில் ஆளும் கட்சி ஏன் அமைதியாக இருக்கிறது? என்று தெரியவில்லை.

எனது வாழ்நாளில் நான் தோற்கடிக்க வேண்டிய நபர் எடப்பாடி பழனிச்சாமி. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களை முதலமைச்சர்களாக இருப்பதாக பேசியது தேசத்துரோக குற்றம். என்று பெங்களூரு புகழேந்தி கூறினார்.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: