கோவைக்கு 748 புதிய திட்டங்கள்!ரூ.662.50 கோடியில்….துவக்கி வைத்த முதல்வர் ..

கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று  கோயம்புத்தூர், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.271.25 கோடி செலவில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.662.50 கோடி மதிப்பீட்டிலான 748 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,07,410 பயனாளிகளுக்கு ரூ.589.24 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் , கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு சென்னையிலிருந்து புறப்பட்டு கோயம்புத்தூர் சென்றடைந்தார். இன்று காலை கோயம்புத்தூர், ஈச்சனாரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள செல்லும் வழியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிர்மலா மகளிர் கல்லூரி மாணவியர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு அவர்களுடன்  முதலமைச்சர் கலந்துரையாடினார்.

நாளை (25.8.2022) காலை திருப்பூரில் நடைபெறவுள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு ‘ மாநாட்டில் கலந்து கொண்டு தொழில்முனைவோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். பின்னர் நாளை மறுநாள் (26.8.2022) ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.57.05 கோடி செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம், நகர நலவாழ்வு மையங்கள், சிறுவர் விளையாட்டுப் பூங்கா, குடிநீர் விநியோகத் திட்டம், உள்ளிட்ட 18 வளர்ச்சி திட்டப் பணிகள்;
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் ரூ.24.33 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின்நிலையங்கள் மற்றும் கூடுதல் மின்மாற்றிகள்;

பேரூராட்சிகள் பகுதிகளில் ரூ.22.44 கோடி செலவில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், பெருமாள் கோவில்பதி பகுதியில் பாலம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், சமுதாய நலக்கூடம், தார் சாலைகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளிட்ட 33 வளர்ச்சி திட்டப் பணிகள்;
பொதுப்பணித் துறையில் (நீர்வள ஆதார அமைப்பு) ரூ.17.81 கோடி செலவில் பரம்பிக்குளம் ஆழியார் வடிநிலத்தில் ஆச்சிப்பட்டி ஓடை, கோதவாடி ஓடை, சூலக்கல் ஆறு, வரட்டாறு ஆகியவற்றில் தடுப்பணைகள் மற்றும் புனரமைக்கப்பட்ட பரம்பிக்குளம் பிரதானக் கால்வாய் ஆகிய முடிவுற்ற 5 பணிகள் மற்றும் பொதுப்பணித் துறை (கட்டடம் மற்றும் பராமரிப்பு) ரூ.11.38 கோடி செலவில் கால்நடை மருந்தகங்கள், அரசுப் பள்ளிகளில் கணினி, கலை மற்றும் ஓவிய அறைகள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம் உள்ளிட்ட 10 பணிகள்;நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.2.59 கோடி செலவில் கணபதி – அத்திப்பாளையம் சாலையில் உயர்மட்டப் பாலம்;உயர்கல்வித் துறை சார்பில் ரூ.11.48 கோடி செலவில் பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் மற்றும் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள், நூலகம், கருத்தரங்கக்கூடம்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.20.73 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம், சுயஉதவிக் குழுக் கட்டடங்கள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், தானியக் கிடங்கு, சாலைகள் அமைத்தல், ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள் உள்ளிட்ட 138 பணிகள்;வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.2.73 கோடி செலவில் துணை வேளாண்மை விரிவாக்க மையம், புதிய தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சிக் கட்டடம் மற்றும் மறுசீரமைப்பு செய்யப்பட்ட குறிச்சி உழவர் சந்தை ; கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ரூ.33 இலட்சம் செலவில் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கக் கட்டடம், நகரும் நியாய விலைக்கடை உள்ளிட்ட 4 பணிகள்; இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.35 இலட்சம் செலவிலான 3 பணிகள்; என மொத்தம் ரூ.271.25 கோடி செலவில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction