இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு
பரபரப்பான உலகம். அனைவரும் ஆடி ஓடிப் பணியாற்றும் சூழல். எதற்கும் நேரமில்லை என்ற சலிப்பு. இயந்திர கதியில் இயங்கும் உலகத்தாருக்கு ஓர் ஒப்பற்ற அறிவுரையை மகான் யோகானந்தர் தனது “ஒளியுள்ளள இடத்தினில்” என்ற நூலில் அருளியுள்ளார்.

வங்கிக் கணக்கில் பணத்தைப் போடாமல் தொடர்ந்து காசோலைகளை எழுதினால் பணம் இல்லா நிலை ஏற்படும்.அது போன்றே வாழ்க்கைக் கணக்கில் அமைதியைத் தவறாது சேமிக்கத் தவறினால், சாந்தம், வலிமை மற்றும் மகிழ்ச்சி இல்லாது போய் விடும்.
இறுதியாக உடல், மனம்,உணர்ச்சி மற்றும் ஆன்ம ரீதியாக திவால் ஆகி விட நேரிடும். தினமும் கிரியா யோக தியானம் மூலம் இறைவனுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டு விளையும் அது அமைதியினை உங்கள் அக வங்கிக் கணக்கில் சேமித்து வந்தால் உடல், மனம் மற்றும் ஆன்ம நலம் சிறந்தோங்கும்.
மகான் யோகானந்தரின் அஞ்சல் வழி ஆன்ம அனுபூதி பாடங்கள் தற்போது தமிழிலும் கிடைக்கின்றன. இந்திய யோகதா சத் சங்கம் இப்பாடங்களை சமீபத்தில் கணினி செயலியுடன் வெளியிட்டுள்ளது.
தொடர்புக்கு :
யோகதா சத் சங்க தியான கேந்திரா,
கோயமுத்தூர்.
90806 75994