காடை பிரியாணி !!

தேவையான பொருட்கள் :

மஞ்சள் தூள் = 1 ஸ்பூன்
தயிர் = 50 மில்லி
காடை = 4 பீஸ்
கிராம்பு = 4 பீஸ்
நெய் = 50 மில்லி
ஏலக்காய் = 2 பீஸ்
எண்ணெய் = 100 மில்லி
மிளகாய் தூள் = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி தலை = 50 கிராம்
இஞ்சி = 1 பீஸ்
பூண்டு = 1 பீஸ்
பிரியாணி அரிசி = 3/4 கிலோ (750 கிராம்)
பெரிய வெங்காயம் = 150 கிராம்
தேயங்காய்ப்பால் = 100 மில்லி
தக்காளி =100 கிராம்
பட்டை = 2 பீஸ்
பச்சைமிளகாய் = 5 பீஸ்
பிரிஞ்சி இலை = 1 பீஸ்
புதினா இலை = 50 கிராம்
பிரியாணி மசாலா = தேவையெனில்
அன்னாசி பூ = 1 ஸ்பூன்
முந்திரி = 12 பீஸ்
கருவேப்பிலை = 50 கிராம்
மிளகு சீரகம் = 2 ஸ்பூன்

செய்முறை : 1
சுத்தம் செய்து வைத்துள்ள காடையில் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு மற்றும் தயிர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும், மிளகு சீரகம் யை பொடியாக அரைத்து வைக்கவும் வெங்காயம் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்,அரிசியை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

செய்முறை : 2


குக்கரில் எண்ணெய்,நெய் ஊற்றி சூடேற்றவும் இவை சூடேறியதும் அதில் பட்டை,பிரிஞ்சி இலை,கிராம்பு,அன்னாசி பூ,ஏலக்காய்,முந்திரி ஆகியவை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்,பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயம்,தக்காளி,யை இதனுடன் சேர்க்கவும் இவற்றை 5 நிமிடம் வரை வதக்கவும்,கடைசியாக புதினா,மல்லி இலை மற்றும் கருவேப்பிலையை போடவும்.


செய்முறை : 3


நன்கு ஊறிய காடையை எடுத்துஒருமுறை லேசாக கழுவி பின் குக்கரில் உள்ள பொருட்களுடன் போட்டு 5 நிமிடம் வரை பிரட்டி எடுக்கவும்,இதில் இஞ்சி பூண்டு யை பேஸ்ட் ஆக்கி சேர்த்து வதக்கவும்,பிறகு தயிர் ஊற்றி மிளகு சீராக பொடியை தூவி கிளறவும் இதனுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக கிளறவும்.

செய்முறை : 4


10 நிமிடம் கழித்து ஊறவைத்த அரிசியை குக்கரில் போட்டு ஓட்டு மொத்த கலவையயும் நன்றாக கலக்கவும் குக்கரை மூடி தேவையான அளவு விசில் வைத்து வேக விடவும் .
பிரியாணி தயாரானதும் அதனை பரிமாறும் பாத்திரத்தில் வைத்து உங்களுக்கு பிடித்த பொருட்களை கொண்டு அலங்கரிக்கவும், இப்போது உங்கள் சுவையான (Kaadai Briyani recipe) காடை பிரியாணி தயார் !!!

Leave a Reply