சிக்கன் பிரியாணி!!

தேவையான பொருட்கள் :

மஞ்சள் தூள்       = 1 ஸ்பூன்
தயிர்           = 1/4 கப்பு
தேங்காய்பால்       = 2 கப்பு
வறுத்த முந்திரி      = 10 பீஸ்
தண்ணீர்         = தேவையான அளவு
பிரிஞ்சி இலை      = 2 பீஸ்
எண்ணெய்        = தேவையான அளவு
வெண்ணெய்       = 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு     = 1 ஸ்பூன்
சிக்கன்          = 1/2 கிலோ
பிரியாணி அரிசி      = 4 கப்பு
பெரிய வெங்காயம்    = 3 பீஸ்
தக்காளி          = 3 பீஸ்
புதினா          = 1 கட்டு
கொத்தமல்லிதலை    = 1 கட்டு
மிளகாய்தூள்       = 1/2 ஸ்பூன்
பச்சைமிளகாய்      = 5 பீஸ்
இஞ்சி பூண்டு விழுது   = 2 ஸ்பூன்
பட்டை          = 2 பீஸ்
ஏலக்காய்         = 3 பீஸ்
கிராம்பு          = 4 பீஸ்
உப்பு           = தேவையான அளவு

செய்முறை : 1


முதலில் பிரியாணி அரிசியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்,பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு விழுது ஏலக்காய்,பட்டை,கிராம்பு ஆகியவற்றை அரைத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்யவும்.

செய்முறை : 2


கழுவிய சிக்கனில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும்.

செய்முறை : 3


குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்,எண்ணெய் சூடேறியதும் பெரியவெங்காயம்,பிரிஞ்சி இலை சேர்த்து நன்றாக வதக்கவும், பின்பு இதில் சிக்கன் பீஸ்களை சேர்த்து சிக்கனின் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கவும். இப்போது குக்கரில் சிக்கனுடன் தக்காளி,தயிர் சிறிது மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும். இந்த கலவையை 10 நிமிடம் வேகவைக்கவும்.

செய்முறை : 4


குக்கரை திறந்து அதில் தேங்காய்ப்பால் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இறுதியாக ஊறவத்த அரிசியை எடுத்து அதில் 8 கப்பு தண்ணீர் ஊற்றி குக்கரில் ஊற்றவும் இதனுடன் 1 ஸ்பூன் வெண்ணெய்,முந்திரி சேர்த்து,முழு உணவு கலவையையும் நன்றாக கிளறிவிட்டு குக்கரை மூடி 2 அல்லது 3 விசில் வைக்கவும்.

இப்போது உங்கள் சூடான (South indian chicken briyani recipe) செட்டிநாடு சிக்கன் பிரியாணி ரெடி!!! பிரியணியை பரிமாறும் பாத்திரத்தில் வைத்து கொத்தமல்லி,பச்சடி எலுமிச்சை மற்றும் உங்களுக்கு பிடித்த பழ காய்கறிகளை வைத்து அலங்கரிக்கவும்.

Leave a Reply