நகைக்கடைக்குள் புகுந்து தங்க செயினை திருடிய திமுக பெண் நிர்வாகி… சிசிடிவியில் வெளியான காட்சிகள் …
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் திமுக நகர செயலாளராக உள்ளவர் பாலன் ராஜன். இவரது மனைவி தேவி. இவர் அங்கமங்கலம் ஊராட்சி திமுக 8-வார்டு செயலாளராக உள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் திருச்செந்துர் வடக்கு ரத வீதியில் உள்ள நகைக்கடைக்கு சென்ற தேவி அங்கு செயின்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
கடை ஊழியர் கவனிக்காதபோது தான் கொண்டுவந்த கவரிங் செயினை வைத்து விட்டு, தங்க செயினை தனது பைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றார்.
கடை ஊழியர்கள் நகையை சரிபார்த்தபோது, அதில் கவரிங் செயின் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது திமுக நிர்வாகி தேவி கவரிங் நகையை மாற்றி வைத்துவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே திமுக பெண் நிர்வாகி நகையை திருடியது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.