மாநகராட்சி கமிஷனர் பெயரில் பணம் கேட்டு தொடர் வாட்ஸ் ஆப் மெசேஜ்…. அதிகாரிகள் அதிர்ச்சி ..

சாதாரண மக்களை மட்டுமே குறி வைத்து நடத்தப்படும் மோசடிகள் தற்போது அதிகாரத்தில் உள்ளவர்களின் பெயர்களையும் பயன்படுத்தி மோசடி நடைபெறுகிறது.

அந்தவகையில் ஏற்கனவே தேனி மாவட்ட ஆட்சியர் பெயரில் பணம் கேட்டு மெசேஜ் அனுப்பிய மர்ம நபர், தற்போது மதுரை மாநகராட்சி ஆணையர் பெயரில் பணம் கேட்டு உயர் அதிகாரிகளுக்கு மெசேஜ் அனுப்பிய புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி ஆணையாளராக சிம்ரன்ஜித் சிங் காலோன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பதவியேற்று  பணிபுரிந்துவருகிறார். 

இந்த நிலையில் ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் பெயரில் போலியான வாட்ஸ்அப் எண் கணக்கு தொடங்கி அதன் மூலமாக மர்ம நபர் ஒருவர் மதுரை பகுதியில் உள்ள மாநகராட்சி உதவி ஆணையாளர்களுக்கு  மெசேஜ் அனுப்பி அதன் மூலமாக பணம் வேண்டும் என அனுப்பியுள்ளனர்,

இதனை நம்பிய சிலர் பணத்தை அனுப்பி ஏமாற்றமடைந்துள்ளனர், சிலர் நேரடியாக ஆணையாளரை தொடர்புகொண்டு பணம் குறித்து சில அதிகாரிகள் கேட்டுள்ளனர், அப்போது அதிகாரிகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் சார்பில் மோசடி தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,

முதற்கட்ட விசாரணையில் போலியான வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி மோசடி செய்த எண்ணை தொடர்புகொண்டபோது பெண் ஒருவர் பேசியதும், மோசடியாக பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் இது போன்ற மோசடி நடைபெற்றதும் தெரியவந்துள்ளது, இதனையடுத்து மோசடி நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

Leave a Reply