மனைவியை ஆபாசமாக குளிக்க வற்புறுத்திய கணவர்..!! – காரணத்தை கேட்டு அதிர்ந்த காவல்துறை

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஆண் குழந்தை பிறக்க வேண்டி இளம்பெண் ஒருவரை பொதுவெளியில் குளிக்க சொல்லி அவரது கணவரே வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சாமியார் ஒருவர் சொன்னதன் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவரும் அவரது குடும்பத்தினரும் அவரை வற்புறுத்தி இவ்வாறு செய்ய வைத்துள்ளனர். 

இந்நிலையில், அந்த பெண், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் மவுலானா பாபா ஜமாதார் என அழைக்கப்படும் அந்த சாமியார் மீது புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

மேலும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், தனது கணவரின் குடும்பத்தினர்,  2013 ஆம் ஆண்டில் இருந்து வரதட்சனை கேட்டு, தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக கூறியுள்ளார். ஆண் குழந்தை  பிறக்க வேண்டும் என்பதற்கு இது போன்ற சடங்குகளுக்கு பலமுறை உட்படுத்தியதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சாமியார் ஒருவர்,  பொதுவெளியில் உள்ள அருவி ஒன்றில் நிர்வாணமாக குளித்தால் ஆண் குழந்தை பிறக்கும் என கூறியதன் அடிப்படையில் கணவரின் குடும்பத்தினர், அந்த சடங்ககை செய்ய சொல்லி வற்புறுத்தி, ராய்கட் மாவட்டத்தில் உள்ள அருவிக்கு அழைத்து சென்றதாக குறிப்பிட்டிருந்தார். 

மேலும் அவரது கணவர், தன்னை கட்டாயப்படுத்தி கையெழுத்தை பெற்று, தன் பெயரில் ரூ.75 லட்சம் வங்கிக்கடன் பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply