18 அடி உயரம்… தங்கத்தால் உருவாகும் விநாயகர் சிலை – ஆச்சர்யத்தில் முழ்கிய மக்கள்..!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் சந்தௌசியில் 18 அடி உயரம் தங்க படுக்கைகள் கொண்ட விநாயகர் சிலை செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பெரும் புகழ் பெற்றது. பக்தர்கள் துதிப்பாடல்களைப் பாடி, மலர்களைக் காணிக்கையாக செலுத்தி, பிரசாதம் வழங்கி, அடுத்த பத்து நாட்கள் இந்த திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

இந்த வருடம் விநாயக சதுர்த்தி ஆகஸ்ட் 31, 2022 அன்று வருகிறது. அதற்க்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், பலர் விநாயகப் பெருமானை தங்கள் வீட்டிற்குள் வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து தற்போது, உத்தரபிரதேசத்தில் விநாயகர் சதுர்த்திக்காக 18 அடி உயரம் கொண்ட தங்கப் படுக்கையுடன் கூடிய விநாயகர் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அப்பகுதி மக்கள் தங்கத்தால் உருவாகும் விநாயகர் சிலை பார்த்து ஆச்சர்யத்தில் முழ்கியுள்ளனர்.

Leave a Reply