இந்த டிஎஸ்பி நினைத்தால் ஒருவரை குற்றவாளியாக்க முடியும்…ஜீய புரம் டிஎஸ்பி குறித்து தமிழக அமைச்சர் பேச்சால் சர்ச்சை …
திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டார்.
இதன் பின்னர் மேடையில் உரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு அங்கு அமர்ந்திருந்த திருச்சி மாவட்டம் ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசு தேவனை பற்றி பேசினார். பரவாசு தேவன் தனக்கு செக்யூரிட்டி எஸ்ஐயாக இருந்தவர் என்றும், பல்வேறு பணிநிலையை கடந்து தற்பொழுது டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் எனவும் கூறினார்.
அவரது திறமை என்னவென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர் என்றார். இந்த டிஎஸ்பி நினைத்தால் ஒருவரை குற்றவாளியாக்கவும் முடியும், குற்றவாளியிலிருந்து எடுத்து விடவும் முடியும் என கூறினார். அவர் தங்களுடன் வளர்ந்தவர் என்பதால் இதற்கு மேல் அவரைப் பற்றி ஒன்றும் கூற முடியாது என்று பேசினார்.
அமைச்சராக இருக்கும் ஒருவர் டிஎஸ்பி நினைத்தால் ஒருவரை குற்றவாளியாக்கவும் முடியும், குற்றவாளியிலிருந்து எடுத்து விடவும் முடியும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.