கோவையில் திமுகவில் இணைந்த 55 ஆயிரம் பேரும் துரைமுருகன் சொன்னது போல விப…..ரிகளா… நக்கலடித்த செல்லூர் ராஜு…

மதுரை :

அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை எனவும், எடப்பாடி பழனிசாமியின் கீழ் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 30 இலட்ச ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடப்படுவுள்ளது. கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இதில் கலந்து கொண்ட நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் ” மதுரை மாநகராட்சியில் மேயராக உள்ள இந்திராணி நிதியமைச்சரின் நிழலாக செயல்படுகிறார், நிதியமைச்சர் கீ கொடுத்தால் மட்டுமே மேயர் பொம்மை போல செயல்படுகிறார், மதுரை மாநகராட்சியில் மேயர் எந்தவொரு பணிகளும் செயல்படுத்தவில்லை, மதுரை மாநகராட்சி இயங்குதா? இயங்கவில்லையா என தெரியவில்லை,

தமிழக அரசு மதுரை மாநகராட்சி மட்டுமல்ல தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது, திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது ஒன்றும், ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒன்றும் பேசி வருகிறது,

கோவையில் திமுகவில் இணைந்த 55 ஆயிரம் பேரும் துரைமுருகன் சொன்னது போல விபச்சாரிகளா?, சினிமாத்துறை உதயநிதி ஸ்டாலின் கையில் உள்ளது, உதயநிதிக்கு படம் வழங்காததால் பல படங்கள் முடங்கி கிடக்கிறது, ‘அவரது’ கண் அசைவுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள், முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார், மக்களை கவனிக்கவில்லை. இவ்வாறு ஆவேசமாக கூறினார் .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction