மாணவர்களே உஷார்… இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாம்.. யுஜிசி அறிவிப்பு..

இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவின் கீழ் செயல்பட்டு வருகின்றன.  நாட்டில் உள்ள  சுயநிதிக் கல்லூரிகள் தவிர பிற கல்லூரிகள் அனைத்தும்  பல்கலைக்கழகங்களின் இயங்குகின்றன. அந்தவகையில் கடந்த ஆண்டு புள்ளி விவரங்களின் படி இந்தியாவில் ,  54 மத்திய பல்கலைக்கழகங்கள்,  425 மாநிலப் பல்கலைக்கழகங்கள்,  125 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் , 380 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம்  984 பல்கலைக்கழங்கள் உள்ளன.  நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் அனைத்துக் இந்த பல்கலைக்கழகங்களின் கீழே இயங்கி வருகின்றனர்.  

கடந்த சில ஆண்டுகளாக  உயர்க்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப  கல்வி நிலையங்களும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.  ஆகையால் அவற்றில் போலி  கல்வி நிலையங்களை அடையாளம் காண்பது சாவால் நிறைந்ததாக இருக்கிறது.

எராளமான  மாணவர்கள் இதுபோன்ற போலி கல்வி நிலையங்களில் கல்வி பயின்று தங்களது எதிர்காலத்தை இழந்துவிடுகின்றனர். அங்கீகரிக்கப்படாத கல்லூரிகள், பள்ளிகளை தாண்டி ஏராளமான பல்கலைக்கழகங்களும் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவது  தெரியவந்துள்ளது.

அதாவது  இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யுஜிசி அறிவித்துள்ளது.  அதிகபட்சமாக டெல்லியில் 8 பல்கலை.ம்,   உத்தரபிரதேசத்தில் 4 , மேற்குவங்கம், ஓடிசா மாநிலங்களில் தலா 2  பல்கலைக்கழகங்களும்,  கர்நாடகா,  கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் தலா 1 போலி பல்கலைக்கழகங்களும்  செயல்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறது.  இந்தப் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply