மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை!!

மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைக்கு பிறகு காலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மன் வெள்ளி கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

முத்தமிழ் விநாயகர் சன்னதி, நாகர் சன்னதி, பகாசுரன் சன்னதியில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கோவில் கொடி மரம் முன்பு பெண்கள் எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தனர்.

Leave a Reply