காமாட்சிதேவிக்கு குங்கும லட்சார்ச்சனை !!

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் சிரவண மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று காமாட்சிதேவிக்கு குங்கும லட்சார்ச்சனை செய்யப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கோவில் மண்டபத்தில் உள்ள மகாலட்சுமி தாயார், சரஸ்வதி தாயார், காமாட்சியம்மனுக்கு சிறப்புப்பூஜைகள், குங்கும லட்சார்ச்சனை செய்யப்பட்டது. முதலில் கலச ஸ்தாபனம், கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், கலச ஆராதனம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு குங்குமம் சாத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவில் கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார் ரெட்டி, கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சீனிவாசலு, கோவில் அதிகாரி பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply