அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பயங்கர தீ விபத்து….

சென்னை

சென்னை அரசுப் பொது மருத்துவமனை ஆசியாவின் மிகப்பெரிய பொது மருத்துவமனையாகும். ஏழு அடுக்கு கொண்ட இரண்டு புதிய அடுக்குமாடிக் கட்டடங்கள் கொண்ட இம்மருத்துவமனை கடந்த 2005ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக கொரோனா தீவிரமாக இருந்த காலகட்டத்தில் இம்மருத்துவமனையில் லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அதிகாலை 3.30 மணிக்கு ஏசி இயந்திரத்தில் தீ பிடித்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அச்சமயத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த  5 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது

Leave a Reply