எளிமையான முறையில் ”ஆட்டு ஈரல் பொரியல்” செய்யும் முறை !!

ஆட்டு ஈரல் ல எண்ணற்ற பல சத்துகள் நிறைந்துள்ளது. எளிமையான முறையில் ஈரல் பொரியல் ( Mutton liver ) செய்யலாம் வாங்க :

தேவையான பொருட்கள் :

ஆட்டு ஈரல் = 400 கிராம்
மஞ்சள் தூள் = 1 ஸ்பூன்
மிளகாய் தூள் = 1 ஸ்பூன்
பட்டை = 2 பீஸ்
வெங்காயம் = 3 பீஸ் ( சிறியது )
லவங்கம் = 4 பீஸ்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
கடுகு = 1 ஸ்பூன்
கருவேப்பிலை = சின்ன கொத்து

செய்முறை : 1


முதலில் ஆட்டு ஈரலை தண்ணீரில் கழுவி, சுத்தம் செய்து, தேவைக்கேற்ப சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மஞ்சள் தூள்,மிளகாய்தூள், கொஞ்சம் உப்பு ஆகியவற்றை சேர்த்து, ஈரலுடன் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

செய்முறை : 2


கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து, எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்த்து பொரியவிடவும். பின் வெங்காயத்தை போட்டு சிவக்கவிடவும். வெங்காயம் வதங்கியதும், கருவேப்பிலை சேர்க்கவும். ஊறவைத்த ஈரலை வெங்காயத்துடன் சேர்த்து நன்கு வறுக்கவும். சிவக்க வெந்ததும், லவங்கம், பட்டை இரண்டையும் பொடிசெய்து ஈரலுடன் சேர்த்து கிளறி இறக்கவும்.

இப்போது சூடான, சுவையான ஈரல் பொரியல்  ( Mutton liver ) தயார் !!!

Leave a Reply