“சிக்கன் ரோஸ்ட்” செய்முறை விளக்கம்..!
சிக்கனை பயன்படுத்தி காரசாரமாக, சுவையாக, ஈசியாக சிக்கன் ரோஸ்ட் ( Indian chicken curry recipe ) செய்யும் முறை :
தேவையான பொருட்கள் :
கோழிக்கறி = 1 கிலோ
பச்சைமிளகாய் = 3 பீஸ்
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
தேங்காய்ப்பால் = 2 கப்பு
பச்சை மிளகாய் = 1 ஸ்பூன் ( அரைத்தது )
உப்பு = தேவையான அளவு
மல்லி தழை = சின்ன கொத்து
இஞ்சி பேஸ்ட் = 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு = 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் = 1 பெரிய பீஸ்
தக்காளி = 2 பீஸ்
எண்ணெய் = தேவையான அளவு
பூண்டு பேஸ்ட் = 2 ஸ்பூன்
செய்முறை : 1
முதலில் சிக்கனை சுத்தம் செய்து கழுவி, அதில் பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் அரைப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
செய்முறை : 2
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், அதனுடன் இஞ்சி பேஸ்ட், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு இதில் பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிபோட்டு, மஞ்சள் தூள், தேங்காய் பால் கலந்து லேசான தீயில் வேக வைக்கவும்.
செய்முறை : 3
இந்த கலவை கெட்டியானதும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். இப்போது பூண்டு, மிளகாய், எலுமிச்சை சாறு கலந்து வைத்திருக்கும் கோழிக்கறியை அடுப்பில் காட்டி ரோஸ்ட் செய்து, தயாராக வைத்திருக்கும் மசாலா கிரேவியை கோழிக்கறி முழுவதும் பூசி பேக் செய்து, மீண்டும் 10 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும், இறுதியில் ரோஸ்ட் செய்த சிக்கன் மீது மல்லிதழை தூவி அலங்கரிக்கவும்.
இப்போது காரமான, சுவையான சிக்கன் ரோஸ்ட் ( Indian chicken curry recipe ) சுட சுட ரெடி !!!