டெல்லி ஸ்டைல் “மீன் வறுவல்” – செய்முறை விளக்கம்..!!

டெல்லி ஸ்டைல் ல் சூப்பராக, சுவையான மீன் வறுவல் ( Indian fish fry recipes ) செய்யும் முறை :

தேவையான பொருட்கள் :

மீன் = 1/2 கிலோ
( தோல், முள் நீக்கியது )
சிறிய இறால் = 100 கிராம்
பெரிய வெங்காயம் = 1 பெரிய பீஸ்
இஞ்சி பேஸ்ட் = 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 2 பீஸ்
கருவேப்பிலை = ஒரு சின்ன கொத்து
மிளகாய்த்தூள் = 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1 ஸ்பூன்
வெந்தய தூள் = 1/4 ஸ்பூன்
முட்டை = 1
பூண்டு பேஸ்ட் = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
அரிசி மாவு = 50 கிராம்
எலுமிச்சை சாறு = 2 ஸ்பூன்

செய்முறை : 1


முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி, அதில் மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்,எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மீனில் கலந்து 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

செய்முறை : 2

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் வரை கிளறவும். பிறகு இதனுடன் இறால், எலுமிச்சை சாறு, வெந்தய தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக தண்ணீர் வற்றும் வரை கிளறவும். அனைத்து பொருட்களும் வெந்து, பச்சை வாசனை போனதும் கீழே இறக்கி, தனியாக ஆற வைக்கவும்.

செய்முறை : 3

பிறகு இதில் முட்டையை அடித்து கலக்கி விடவும், இந்த கலவையில் மீனை முக்கி எடுத்து, பிறகு அரிசி மாவில் புரட்டி எடுத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும், மீன் நன்கு பொறிந்ததும் மீனை வெளியே எடுத்து கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

இப்போது சூடான, ருசியான மீன் வறுவல் டெல்லி ஸ்டைல் ( Indian fish fry recipes ) தயார் !!!

Leave a Reply