பெண்களுக்கு மிகவும் பிடித்த இறால் பக்கோடா !!

கடல் உணவுகளில் இன்றியமையாததும், அனைவருக்கும் பிடித்ததுமான இறாலை பயன்படுத்தி இறால் பக்கோடா ( Indian prawn recipes ) செய்யலாம் வாங்க :

தேவையான பொருட்கள் :

இறால் = 1/4 கிலோ
கடலை மாவு = 100 கிராம்
அரிசி மாவு = 50 கிராம்
பாசிபருப்பு மாவு = 50 கிராம்
வெங்காயம் = 1 பெரிய பீஸ்
பச்சை மிளகாய் = 4 பீஸ்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
பூண்டு துருவல் = 2 ஸ்பூன்
கருவேப்பிலை = சின்ன கொத்து
சோம்பு தூள் = 1 ஸ்பூன்
இஞ்சி = 1 பீஸ்

செய்முறை : 1
முதலில் இறாலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். இஞ்சி, பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.

செய்முறை : 2
இறாளுடன் இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், சோம்பு தூள், பூண்டு துருவல், கருவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, பாசிபருப்பு மாவும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவு உதிரும் பதத்தில் வந்ததும் சிறிது நேரம் அப்படியே ஊற வைக்கவும்.

செய்முறை : 3
கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்த இறால் மாவு கலவையை எண்ணெயில் போட்டு உதிர்த்து பிரட்டி எடுக்கவும். எல்லா பக்கமும் வெந்ததும் இறக்கி விடவும்.

Leave a Reply