அனைவருக்கும் பிடித்த மட்டன் போண்டா!!

அனைவருக்கும் பிடித்த மட்டனை போண்டாவில் வைத்து மட்டன் போண்டா ( Recipe of mutton curry ) செய்யலாம் வாங்க :

தேவையான பொருட்கள் :

உளுந்து மாவு = 1/4 கிலோ
ஆட்டுக்கறி = 1/2 கிலோ
அரிசி மாவு = 4 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு a
பச்சைமிளகாய் = 4 பீஸ்
உப்பு = தேவையான அளவு
இஞ்சி = 1 துண்டு
கொத்தமல்லி இலை = 1 சின்ன கொத்து
மிளகாய்தூள் = 1/2 ஸ்பூன்

செய்முறை : 1


முதலில் மட்டனை தனியாக வேகவைத்து, எலும்பு நீக்கி பொடியாக அரைத்து வைக்கவும். பச்சைமீளகாயை பொடியாகவும், இஞ்சியை பேஸ்ட் ஆகவும் அரைத்து வைக்கவும்.

செய்முறை : 2


உளுந்து மாவை கெட்டியாக அரைத்து, இதனுடன் அரிசி மாவையும், அரைத்துவைத்த மட்டனையும் சேர்க்கவும். பிறகு இதனுடன் இஞ்சி பேஸ்ட், நறுக்கிய பச்சைமிளகாய், தேவையான அளவு உப்பு, மிளகாய்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து போண்டா மாவை தயார் செய்யவும்.

செய்முறை : 3


கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தயாராக உள்ள போண்டா மாவை உருண்டையாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Leave a Reply