வான்கோழி பிரியாணி செய்யும் முறை !!
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி = 3 கப்பு
வான்கோழி கறி = 1 கிலோ
முந்திரி = 10 பீஸ்
திராட்சை = 10 பீஸ்
குங்கும பூ கலர் பவுடர் = 1/2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
பால் = 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் = 2 பீஸ்
தக்காளி = 2 பீஸ்
கொத்தமல்லி = 1 சின்ன கட்டு
புதினா இலை = 1 சின்ன கட்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் = 3 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
லவங்கம் = 4 பீஸ்
பட்டை = 2 பீஸ்
தயிர் = 1 கப்பு
நெய் = 2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் = 3 ஸ்பூன்
மிளகாய்த்தூள் = 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 5 பீஸ்
எலுமிச்சை = 1 பீஸ்
ரோஜா எசன்ஸ் = 2 சொட்டு
ஏலக்காய் = 2 பீஸ்
செய்முறை : 1
முதலில் அரிசியை தண்ணீரில் கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்,மஞ்சள் தூள் உடன் கொஞ்சம் தண்ணீர் கலந்து சுத்தம் செய்து வைத்துள்ள வான்கோழி கறி முழுவதும் பூசவும். பிறகு தயிர் 1 கப்பு ,மிளகாய்ப்பொடி 2 ஸ்பூன்,கரம் மசாலா 1 ஸ்பூன் ,இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன் உப்பு தேவையான அளவு,எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வான்கோழி கறி மீது பூசி நன்றாக ஊற வைக்கவும்.( இந்த மசாலா கலவையை சமைப்பதற்கு முதல் நாளும் பூசி ஊற வைத்து ஃபிரிட்ஜ் இல் வைத்து பயன்படுத்தலாம்)
செய்முறை : 2
பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்,எண்ணெய் காய்ந்ததும் சீரகம்,லவங்கம்,ஏலக்காய்,பட்டை சேர்க்கவும்,பெரிய வெங்காயம்,தக்காளியையும் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.இப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்,இதனுடன் மசாலா வில் ஊறவைத்த வான்கோழி கறியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
செய்முறை : 3
வதங்கிய பின்பு இவற்றை குக்கரில் போட்டு வேக வைக்கவும், இப்போது வான்கோழி கிரேவி ரெடி. தனியாக ஒரு பாத்திரத்தில் 10 கப்பு தண்ணீரை கொதிக்க வைக்கவும்,தண்ணீர் கொதித்ததும் அதில் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்க்கவும் பிறகு ஊறவைத்த 3 கப்பு பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்,அரிசி பாதி வெந்ததும் பாத்திரத்தை கீழே இறக்கி முழு தண்ணீரையும் வடிகட்டவும்.
செய்முறை : 4
வடிகட்டப்பட்ட அரிசி பாதியை குக்கரில் போடவும்,பின்பு தயாராக வைத்துள்ள வான்கோழி கிரேவி யை அரிசி மீது சேர்க்கவும்,பிறகு மீதமுள்ள அரிசியையும் கிரேவி மீது சேர்க்கவும்,2 ஸ்பூன் பாலையும் ரோஜா எசன்ஸ் யும் ஒன்றாக கலந்து அரிசியில் சேர்க்கவும்,இவற்றின் மேல் பரப்பில் 1 ஸ்பூன் நெய் யை தெளிக்கவும்.குக்கரை நன்றாக மூடி வேகும் வரை 3 முதல் 4 விசில் வைக்கவும்.