தமிழகம் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது ….வைகோ கவலை …

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும், தமிழகம் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 
 
சிவகாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். இதன் பின்னர் அவர் கூறியதாவது: 
தினமும் நாளிதழ் , தொலைக்காட்சிகளில் நல்ல செய்தியை பார்க்க முடியவில்லை. கணவனை கொலை செய்த மனைவி, மனைவியை கொலை செய்த கணவன் என்ற செய்திதான் வருகிறது. பண்பாடும், ஒழுக்கமும் சிதைந்துள்ளது.

தமிழகம் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான்.தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒரு அறிவிப்பு வருகிறது. 

தி.மு.க.விற்காக நான் 21 ஆண்டுகள் பாடுபட்டேன். விதியின் விளையாட்டு நான் தி.மு.க.விலிருந்து வெளியேறிய வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் வெளியேறவில்லை, வெளியேற்றப்பட்டேன்.தற்பொழுது மீண்டும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்.

நம்மிடையே ஜாதி, மதத்தின் பெயரால் சச்சரவுகள் இருக்கக்கூடாது. மதம் என்பது அவரவர் நம்பிக்கை. தமிழர்களுடைய பண்பாட்டை சீரழிக்கும் விதமாக இருக்கக் கூடாது. இவ்வாறு வைகோ கூறினார். 

Leave a Reply