ஜெயலலிதா டெல்லியில் பயன்படுத்திய கார் ,மற்றும் டெல்லி அலுவலகத்தை கைப்பற்ற முயற்சிக்கும் ஓபிஎஸ் மகன் …

அதிமுகவின் டெல்லி அலுவலகம்,  மறைந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கார் இரண்டையும் தன் பக்கம் கொண்டு வந்துவிட ஓ.  பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் எம்பி மூலமாக தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார்.  அதிமுகவின் டெல்லி அலுவலகம், ஜெயலலிதா பயன்படுத்திய கார் ஓபிஎஸ் வசம் போகுமா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது அதிமுகவில்.

ஜெயலலிதா ராஜ்ய சபா எம்பியாக இருந்தபோது டெல்லியில் பயணம் செய்ய மாருதி 800 காரை உபயோகப்படுத்தி இருக்கிறார்.  கடந்த 1984ம் ஆண்டில் ஜெயலலிதாவை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கினார் எம்.ஜிஆர்.    ஜெயலலிதா ராஜ்யசபா உறுப்பினராக இருந்தபோது டெல்லியில் தங்கியிருந்து பாராளுமன்றத்திற்கு சென்று வந்தார்.   அப்போது அவர் மாருதி -800 காரை பயன்படுத்தி வந்திருக்கிறார்.   பாராளுமன்றத்திற்கு இந்த காரில் தான் சென்று வந்திருக்கிறார்.  அதன்பின்னர் அவர் தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் முதல்வர் ஆகிவிட்டார்.

டெல்லியில் ஜெயலலிதா பயன்படுத்திய கார்  மைத்ரேயன் எம்.பியின்  வீட்டில் இருந்திருக்கிறது.  அவரது பதவிக்காலம் முடிந்தபின்னர் தம்பிதுரை எம்.பியின் பங்களாவில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்.  

 அந்த கார் முன்னாள் துணை சபாநாயகர்,  ராஜ்யசபா எம்பி தம்பிதுரையின் டெல்லி பங்களாவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.  அதிமுக அலுவலகம்
 டெல்லியில் கட்டப்பட்டு வருகிறது.   அந்தப் பணிகள் முடிவடைந்தது அந்த அலுவலகத்தில் ஜெயலலிதா உபயோகித்த பொருட்களை கண்காட்சியாக வைக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.    அப்பொழுது ஜெயலலிதா பயன்படுத்தி இந்த மாருதி 800 காரையும் கண்காட்சிக்காக வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் டெல்லி அதிமுக அலுவலகம் , ஜெயலலிதா பயன்படுத்திய அந்த கார்  தங்கள் அணி பக்கம் வந்து விட வேண்டும் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத் எம்பி முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்

Leave a Reply