அரசியலுக்கு வராமல் நடிக்க போயிருந்தால் ஓ.பி.எஸ் ஆஸ்கார் அவார்ட் வாங்கியிருப்பார் … நக்கலடித்த ஜெயக்குமார்……

ஓ.பன்னீர்செல்வம் அரசியலை விட்டு நடிக்க சென்றிருந்தால் ரஜினி, சிவாஜியையே தோற்கடித்திருப்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.  

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செயக்குமார் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி. தினகரனுக்கு அதிமுகவில்இடமில்லை. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் பெட்டிப் பெட்டியாக பணம் வைத்துள்ளனர்.

அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் குவிந்துள்ளது. பணத்தை வைத்து ஆள் பிடிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.பணம் பாதாளம் வரை பாய்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி மாறுவதால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது.

ஆஸ்கரையே ஓ.பன்னீர்செல்வத்தின் நடிப்பு மிஞ்சிவிடும். அரசியலை விட்டு நடிப்புக்கு வந்திருந்தால் ரஜினி, சிவாஜியையே ஓ.பன்னீர்செல்வம் தோற்கடித்திருப்பார். கறந்த பால் மடி புகாது, கருவாடு மீனாகாது என்ற பழமொழிக்கு ஏற்ப அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு இடம் இல்லை. இவ்வாறு கூறினார். 

Leave a Reply