விஜயகாந்துக்கு சல்யூட் அடித்த பெண் காவலர்…. உடனே”டக்” என பதில் சல்யூட் அடித்த ‘கேப்டன்’…நெகிழ்ச்சி போட்டோ…

சென்னை :

பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் விஜயகாந்த்துக்கு சல்யூட் செய்து மரியாதை செய்ததை அடுத்து உடல் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவருக்கு மீண்டும் சல்யூட் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதற்கிடையே நீரிழிவு நோய் காரணமாக சமீபத்தில் அவரது வலது கால் விரல்கள் அகற்றப்பட்டன. மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவர் தற்போது நல்ல நலமுடன் உள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிசிச்சை முடிந்து சில நாட்களிலேயே விஜயகாந்த் வீடு திரும்பினார்.

இதனையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி அவரது ரசிகர்களும், கட்சியினர், அரசியல் திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை மேற்கொண்டதோடு, விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துகளை கூறினர். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் விழா 26ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகாலை முதலே தலைமை அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர். பகல் 12 மணி அளவில் விஜயகாந்த் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 10 நிமிடங்களுக்கு தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த், பின்னர் அவர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் விஜயகாந்தின் பிறந்தநாளின் போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் விஜயகாந்த் அவர்களுக்கு சல்யூட் செய்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து உடல் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் பெண் காவலருக்கு மீண்டும் சல்யூட் செய்து மரியாதை செலுத்தினார் விஜயகாந்த். இந்த புகைப்படத்தினை ‘எங்க கேப்டனுக்கு உடம்பு தாங்க சரியில்ல.. மனசு அப்படியே தான் இருக்கு’ என அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply