நானே ஒரு சர்வதேச தீவிரவாதி …ஆனா எப்ப ஏர்போர்ட் போனாலும் அடையாள அட்டையை காட்ட சொல்றாங்க…. சீமான் ஆதங்க பேச்சு!

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “இப்போது பரந்தூர் விமான நிலையம் வேண்டுமா? அய்யா எ.வ.வேலு பொதுநோக்குக்கு சிலவற்றை நாம் இழக்க வேண்டும், அதில் நீர்நிலைகள் பாதிக்கப்படதான் செய்யும். காஞ்சிபுரத்தில் விமான நிலையம் வந்தால் சென்னையில் போக்குவரத்து குறையும் என சொல்கிறார். விஞ்ஞானிகளுக்கு தோன்றாத யோசனை அய்யா எ.வ.வேலுக்கு தோன்றியிருக்கிறது. எப்படி போக்குவரத்து குறையும் என்பதை சொல்லுங்கள்? வாய்க்கு வந்ததை அடித்து விடுவது.  

நிலத்தை வழங்கினால் வீடுகட்டிக்கொடுப்போம், வீட்டில் ஒருவருக்கு வேலை. இதே டையலாக்கை இன்னும் எத்தனை நாட்களுக்குதான் சொல்வீர்கள். மீத்தேன் திட்டம், அணு உலை, ஸ்டெர்லைட் விவகாரம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மின்சார திட்டம், என்.எல்.சி என அனைத்துக்கும் இதே டையலாக்கை சொல்லிவருகிறார்கள். என் நிலத்தை பறித்து, வீடு, நிலம் இன்றி தெருவில் நிற்கவைக்கிறார்கள்.

எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவீர்கள். போராடும் ஒப்பந்த பணியாளர்களுக்கு முதலில் பணி நிரந்தரம் செய்யுங்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் வலிமையாக இருக்கின்றனர். நாங்கள் அதிகாரமற்ற எளிய பிள்ளைகளாக இருப்பதனால் எங்கள் குரல் எளிமையாக இருக்கிறது.

நான் ஒரு சர்வதேச தீவிரவாதி. ஆனால் விமான நிலையம் செல்லும்போது ஒவ்வொருமுறையும் அடையாள அட்டையை காட்ட சொல்கிறார்கள் அதிகாரிகள் ..எங்கள் போராட்டம் கவனிக்கப்படாமல் செல்கிறது. நிரந்தர அரசு, நிரந்தர முதல்வர் என்ற ஒன்று இல்லவே இல்லை. ஆட்சி மாறும், காட்சிகள் மாறும், இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் நாளை வீதிக்கு வருவர். இன்று வீதியின் நின்று போராடுபவர்கள் ஒரு நாள் அதிகாரத்துக்கு போவார்கள்” எனக் கூறினார்.

Leave a Reply