ஒரு மழைக்கே தாங்காத கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.. கண்டு கொள்ளாத அதிகாரிகள் …பொதுமக்கள் அவதி …

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமையான இன்று ஆட்சியரிடம் மனு அளிக்க பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது குறைகளை முறையிட வருவது வழக்கம்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது.

இங்கு வரும் பொதுமக்கள் மழை நீர் தேங்கி நிற்கும் இடத்தில் சேரும், சகதியுமாக உள்ளதால் “கரணம் தப்பினால் மரணம்” என்பது போல நடந்து, கடந்து வருகிறார்கள்.

மேலும் மனு அளிக்க வந்த ஒருவர் இது பற்றி கூறும் போது:-

ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தின் மையம், இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

புது கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது ஆனால் மழைநீர் வடிகால் அமைக்காமல் போனது ஆச்சரியத்தையும்..!! அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்துகிறது. பொதுமக்களோ, யாரோ? இந்த சகதியில் வழுக்கி விழுந்தால் அவர்களின் நிலை என்ன?

காலம் தாழ்த்தாமல் ஆட்சியர் அவர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்தால் ஏதேனும் விபரீதம் நடக்காமல் தடுக்கலாம் என மனம் நொந்து கூறினார்.

Leave a Reply