ஆசிய கோப்பை – 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரோகித் சர்மா மீண்டும் முதலிடம்!!

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பையில் அறிமுகம் ஆனார். தற்போது அவர் 7-வது ஆசிய கோப்பையில் ஆடி வருகிறார். இதன் மூலம் 7 ஆசிய கோப்பையில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

டோனி, டெண்டுல்கர் ஆகியோர் 6 ஆசிய கோப்பையில் ஆடி உள்ளனர்.

ரோகித் சர்மா ஆசிய கோப்பையில் 28 ஆட்டத்தில் விளையாடி இலங்கையின் ஜெயவர்த்தனேயை சமன் செய்தார்.

அவர் 26 இன்னிங்கில் 883 ரன் எடுத்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 3499 ரன் எடுத்துள்ளார். மார்ட்டின் குப்தில் (நியூசிலாந்து) 3497 ரன்னுடன் 2-வது இடத்திலும், விராட்கோலி 3343 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

Leave a Reply